இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள சக்தி வாய்ந்த புதிய வகை கொரோனா வைரஸ் 3-வது அலையை உருவாக்குமா?

Apr 25, 2021 12:59 PM 1472

இலங்கையில் சக்தி வாய்ந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது மற்ற வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதனால் இலங்கையில் 3-வது அலையை உருவாக்கக்கூடும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted