புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியது - அரவிந்த் கெஜ்ரிவால்

Feb 12, 2020 06:29 AM 452

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதன் மூலம் டெல்லியில் இருந்து புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் அமோக வெற்றி பெற்று 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை தங்களது மகனாக பாவிக்கும் டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி இது எனக் குறிப்பிட்டார். பகவான் ஹனுமான் தங்களை ஆசிர்வதித்துள்ளதாக கூறிய கெஜ்ரிவால், மக்களுக்காக உழைக்க கூடுதல் பலத்தை தங்களுக்கு வழங்குவார் என தெரிவித்தார்.

Comment

Successfully posted