தென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Feb 17, 2020 07:38 PM 643

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது, தென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக, கசடுகள் கழிவுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தென்காசி நகராட்சியில் குறைந்த அளவு மக்கள் தொகை இருப்பதால் அங்கு கசடுகள் கழிவு திட்டம்செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Comment

Successfully posted