தளபதி 64-ல் புதிதாக இணைந்த டிவி தொகுப்பாளினி

Nov 09, 2019 03:27 PM 1033

‘தளபதி 64’ திரைப்படத்தின் படக்குழுவில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி இணைந்துள்ளார்.

பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளனர் .

மேலும் இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி போன்ற நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங் களத்தில் “ ஓ காதல் கண்மணி” ,அனேகன் “ஆடை” உள்ளிட்ட படங்களில் நடித்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யாவும் கலந்துக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெறவிருக்கும் ஷூட்டிங்கிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted