கனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்

Nov 18, 2019 08:27 AM 135

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையின் பல்வேறு இடங்களில் புதிய நீர் வீழ்ச்சிகள் தோன்றியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் பர்லியர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, மரப்பாலம், காட்டேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளன. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று செல்ஃபி எடுத்து வருகின்றனர். நீர் வீழ்ச்சி அருகே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருவது குறிப்பிடதக்கது.

 

Comment

Successfully posted