நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: முதியவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது

Sep 20, 2019 06:48 PM 310

திருவண்ணாமலை அருகே, முதியவர் ஒருவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 16ம் தேதி, ஆரணி சத்தியமூர்த்தி சாலையிலுள்ள பிள்ளையார் கோவில் அருகே, முதியவர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று கொள்ளையர்கள் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டனர். வழிப்பறியில் ஈடுபட்டதோடு, கொள்ளையர்கள் அந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கினர். முதியவர் தாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேரமாவில் பதிவானது. வழிப்பறி சம்பவம் குறித்து, நியூஸ் ஜெ செய்தியில், குற்றமும் தண்டனையும் என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த ஆரணி நகர காவல்துறையினர், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted