திமுக அரசின் தவறுகளை மக்களிடையே சுட்டிக் காட்டுவதால் புறக்கணிக்கப்பட்ட நியூஸ் ஜெ

Aug 03, 2021 11:30 AM 2880

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியை திமுக அரசு புறக்கணித்து ஜனநாயக மாண்பை கெடுத்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுத்திருந்த நிலையில், நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்காமல் தமிழக அரசு இருட்டடிப்பு செய்துள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அரசு கேபிளில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட நியூஸ் ஜெ தொலைக்காட்சி, தொடர்ந்து திமுக அரசின் தவறுகளை பொதுத்தளத்தில் சுட்டிக்காட்டி வருகின்றது.

இந்த நிலையில், அரசு விழாவில் நியூஸ் ஜெ செய்தி தொலைக்காட்சியை புறக்கணித்து திமுக அரசு ஜனநாயக மாண்பை கெடுத்துள்ளது.

Comment

Successfully posted