தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

Jun 13, 2021 07:38 PM 724

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஆட்சியராக விஜயராணி, கோவை ஆட்சியராக சமீரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், காஞ்சிபுரம் ஆட்சியராக ஆர்த்தி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல், தஞ்சை, நாகை, தேனி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்பட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Comment

Successfully posted