நியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை

Jan 09, 2019 08:24 AM 3235

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்தில், சேதமடைந்த பாத யாத்திரை செல்லும் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் - பழனி நெடுச்சாலையில், ஒட்டன்சத்திரம் அருகே பாதயாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட பாதை, சேதமடைந்தும் முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் பாதயாத்திரை பக்தர்கள் தனிப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை பக்தர்கள் சரிசெய்யக் கோரிய செய்தி நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் கடந்த வாரம் 28ம் தேதி வெளியானது.

இதனைத் தொடர்ந்து பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் தனி நடை பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. முட்புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்கின்றனர்.

Comment

Successfully posted

Super User

வாழ்த்துக்கள் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு