நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்

Jan 28, 2019 06:48 AM 4784

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் தந்தை தரம்ராஜ் சென்னையில் காலமானார்.

80 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை 9 மணி அளவில் இயற்கை எய்தினார். அவருக்கு, சாரதா என்ற மனைவியும், சக்சேனா உள்ளிட்ட இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மறைந்த தரம்ராஜ் உடலுக்கு, கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்று மாலை 3 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Comment

Successfully posted