குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை...

Jul 11, 2021 11:20 AM 885

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு வினியோகிக்க கபசுர குடிநீரை குப்பை அள்ளும் வண்டியில் எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவொளி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

 image

இவர்களுக்கு நகராட்சி சார்பில் கபசுர குடிநீர் வினியோகம் செய்ய குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அலட்சியமாக பதிலளித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

 image

கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண

நம்ம ஊர் செய்திகள் தொகுப்பில் 13.00 நிமிடத்திற்கு பிறகு இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

⬇⬇⬇⬇

Comment

Successfully posted