இணையவழி வகுப்பு-இல்லாத அலைபேசி கோபுரம்-ஏற்படுத்தி தர கோரிக்கை.

Jul 11, 2021 08:48 AM 816

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே, செல்போன் டவர் இல்லாததால், மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி, ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

image

சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட காளிங்காவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான மட்டம்பள்ளி, அக்ரகாரம், உள்ளிட்ட 7 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

image

இந்நிலையில், காளிங்காவரம் ஊராட்சியில் எந்தவொரு தொலை தொடர்பு நிறுவனங்களின் டவர்களும் இல்லாததால், மாணவர்கள் செல்போன் சிக்னலை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் செல்போன் மற்றும் புத்தகங்களுடன், மலைப் பகுதிக்கும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீதும், மாடி மீது ஏறியும் படித்து வருகின்றனர்.

image

இதனால், உடனடியாக செல்போன் டவர் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.imageimage

பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கை பேட்டியை காண

⬇⬇⬇⬇⬇

 

Comment

Successfully posted