இன்று மிக கனமழை பொழியும்!! மாவட்டங்கள் எவை?

Jul 11, 2021 08:10 AM 679

வதமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

image

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

image

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.image

செய்தியை காட்சிப்பதிவுடன் கேட்டறியலாம்..

↕↕↕↕↕

Comment

Successfully posted