அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் ரத்து-பரிகார பூஜை நடைபெறும்!!

Jul 13, 2021 09:53 AM 1247

imageமதுரை அழகர்கோவில் ஆடி பெருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.

image

ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடிப் பெருவிழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவலின் 2வது அலை காரணமாக ஆடிப் பெருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

image

இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அனிதா வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆடிப் பெருவிழா கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறும் என்றும், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பரிகார பூஜைகள் கோவில் வளாகத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆடி பிரம்மோற்சவம் விழாவானது வருகிற 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 26ம் தேதி நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண
↕↕↕

 

Comment

Successfully posted