படகுகளை உடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு- தமிழக மீனவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்...

Jul 13, 2021 12:27 PM 12256

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்க, மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

image

தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறைபிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதேபோன்று, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அந்நாட்டு துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

image

இந்தநிலையில், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கிராஞ்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் 18 படகுகளில் 9 படகுகள் சேதமடைந்து இருப்பதால், அவற்றை உடைக்க, மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கையின் மற்ற துறைமுகங்களில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

imageimage

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண
↕↕↕

Comment

Successfully posted