அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Aug 11, 2018 04:02 PM 761

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை விட்டு விட்டு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் குமரி, நெல்லை, திண்டுக்கல். நீலகிரி  மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால்,  மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Comment

Successfully posted