கோலிவுட்டில் அடுத்த பாலியல் புகார் - அனேகன் பட நாயகி கிளப்பிய பரபரப்பு

Oct 12, 2018 12:23 AM 808

அனேகன் பட நாயகன் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அமைரா தஸ்தூர் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

நடிகர் தனுஷ், கார்த்திக் இணைந்து நடித்த அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அமைரா தஸ்தூர். பாலிவுட்டில் இருந்து பரவிய மிடூ பக்கத்தில் இவரும் இணைந்திருக்கிறார். இவர் தனது குற்றச்சாட்டில் தமிழ் நடிகர் ஒருவரை பற்றி தெரிவித்துள்ளார்.

அதன் படி, தான் ஒரு தமிழ் படத்தில் நடித்த போது , அந்தப் படத்தின் நாயகன் , தன்னை மிக இறுக்கமாக கசக்கிப் பிழிவதைப் போல அணைத்து, இந்தப் படத்தில் என்னுடன் நடிப்பதில் அவருக்கு மிகவும் சந்தோசம் என்று ரகசியமாக கிசுகிசுத்தார் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வால் மிகவும் மனப்பாதிப்புக்கு உள்ளானதாகவும் அதன் பிறகு அந்தப் படப்பிடிப்பு நாட்களில் குறிப்பிட்ட அந்த நடிகருடன் பேசுவதைத் தவிர்க்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என அவர் தெரிவிக்க மறுத்து விட்டார். அந்த நாயகன் கோலிவுட்டில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் தன்னால் அவருடைய பெயரை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைரா தஸ்தூரின் இந்த புகாரால், அந்த நடிகர் யார் என தமிழ் திரையுலகமே பரபரத்து கிடக்கிறது.

Comment

Successfully posted