அடுத்த 2 தினங்களுக்கு 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை மையம்

Apr 01, 2019 03:38 PM 166

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரித்து காணப்படும். வெப்பம் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் அனல் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted