நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு

Feb 17, 2020 05:33 PM 823

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே தூக்கிலிடப்பட இருந்த நிலையில், சட்டத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த குற்றவாளிகளுக்கு ஒரு வாரக் காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளின் கருணை மனு, சீராய்வு மனு ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர்களை தூக்கிலிடும் உத்தரவு திகார் சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி, குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ்குமார், அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோர் தூக்கிலிடப்பட உள்ளனர்.

Comment

Successfully posted