பல ஆய்வுக்கு பின்பே பொருளாதார தொகுப்பு திட்டம் வெளியிடப்பட்டது நிர்மலா சீதாராமன் விளக்கம்!!!

May 24, 2020 01:21 PM 920

உலகின் மற்ற நாடுகள் அறிமுகப்படுத்திய பொருளாதார திட்டங்களின் அம்சங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டே, இந்தியாவிற்கான சிறப்பு பொருளாதார தொகுப்பின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்துறை, வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அண்மையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் அம்சங்களையும் மத்திய அரசு விரிவாக அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டங்கள், பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பே அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற நாடுகளின் பொருளாதார திட்டங்களை ஆராய்ந்து அதற்கேற்றவாறு பாதுகாப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

Comment

Successfully posted