டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு

Feb 17, 2020 08:20 AM 118

வூகான் மாகாணத்திலிருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், வூகான் மாகாணத்திலிருந்து டெல்லி வந்த 406 பேரிடம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பாக இந்தோ - திபெத் எல்லையில் உள்ள பரிசோதனை மையத்தில் தீவிர மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இதில் 406 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பரிசோதனை மையத்தில் உள்ள 406 பேரையும் விடுவிக்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆலோசனை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பரிசோதனை மையத்தில் உள்ள 406 பேரும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted