நிதி நெருக்கடியால் மூடு விழாவை நோக்கி கிண்டி பாம்பு பண்ணை

Jun 17, 2021 09:42 PM 1452

சென்னை கிண்டி பாம்புப் பண்ணையை நிர்வகிக்க போதிய நிதி இல்லாததால், அதனை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கிண்டியில் கடந்த 50 வருடங்களாக செயல்பட்டு வரும் பாம்புப் பண்ணையில், பாம்பு, முதலை, ஆமை, பச்சோந்தி போன்ற ஊர்வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பாம்புகளின் வகைகள் குறித்தும், அவற்றின் விஷத்தன்மை குறித்தும் அறிந்து கொள்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிண்டி பாம்பு பண்ணை மூடி கிடைக்கிறது.

இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு அங்குள்ள உயிரினங்களை பராமரிக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணை நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிண்டி பாம்பு பண்ணையில் பணியாற்றும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியத நிலை ஏற்பட்டுள்ளதால், பாம்பு பண்ணையை நிர்வகிக்க உயிரின ஆர்வலர்கள் நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிதி பற்றாக்குறை காரணமாக குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகவும், இருந்தபோதிலும், அங்குள்ள உயிரினங்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருவதாகவும், ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted