பாக். பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு யாருக்கும் அழைப்புவிடுக்கப்படவில்லை

Aug 03, 2018 03:52 PM 782

 

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள்  அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றியது. இந்தநிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 11ஆம் தேதி  பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள், இந்தி திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவை எளிய முறையில் நடத்த உள்ளதாகவும், விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted