"எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கும் தகுதி யாருக்கும் இல்லை" சசிகலாவிற்கு எதிராக போஸ்டர்கள்

Jul 04, 2021 03:25 PM 542

அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதை கழக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மதுரை மாநகர் முழுவதும் சசிகலாவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரையை பொறுத்தவரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா தலைமையில், சசிகலாவுக்கு அதிமுகவில் ஒதுபோதும் இடமில்லை என்ற தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

அதேபோன்று, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாநகர் முழுவதும் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் சசிகலாவிற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றும் கருவாடு மீனாகாது, கறந்தபால் மடி புகாது, எம்.ஜி.ஆர் இயக்கத்தின் புகழை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளன.

ஒற்றுமையாக இருக்கும் அதிமுக தொண்டர்களை ஒருபோதும் சசிகலாவால் பிரிக்க முடியாது என்ற வாசகமும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன.

Comment

Successfully posted