விஸ்வதர்ஷினிக்கு எதிராக விஷால் வழக்கு தொடர்ந்தால் நானும் வழக்கு தொடர்வேன் - ஸ்ரீ ரெட்டி

Dec 02, 2018 12:02 PM 249

மீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராக இருந்தாலும், பணபலத்தாலும் அதிகார பலத்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஸ்ரீ ரெட்டி, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் சங்க பொதுச் செயலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது விஸ்வதர்ஷினி என்ற பெண் சமூகவலை தளங்களில் குற்றச்சாட்டு வைத்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

விஸ்வதர்ஷினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், விஷாலுக்கு எதிராக தாம் வழக்கு தொடர உள்ளதாக ஸ்ரீ ரெட்டி கூறினார். மீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராயிருந்தாலும் தங்களிடம் உள்ள பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Comment

Successfully posted