அக்.20க்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்

Oct 09, 2019 03:03 PM 150

அக்டோபர் 20-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 8 சென்டி மீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் 7 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted