வடகிழக்கு பருவ மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Oct 19, 2019 11:03 AM 205

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் ஓடும் நொய்யல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளம் அதிகமாகும் சமயத்தில் கரையோர மக்கள் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியர் திருமண மண்டபத்தில் தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. வெள்ளப்பெருக்கின் காரணமாக மங்கலம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக் கூடிய, தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted