சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் - சமாளிக்குமா தமிழக தொழில்துறை!

May 25, 2020 10:19 AM 923

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு  திரும்பி கொண்டிருக்கும் வேளையில், தமிழக தொழில்துறையில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஓர் செய்தி தொகுப்பை தற்போது காணலாம்... 

தற்போதையை சூழலில், தமிழகத்தில் பெருநகரங்கள் மற்றும் தொழில் நகரங்கள் யாவும் வட மாநில தொழிலாளர்களால் நிரம்பப்பெற்றுள்ளன.சென்னை தொடங்கி காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட மாநிலத்தவர்கள் இல்லையென்றால் தொழில் உற்பத்தி இயல்பாக நடைபெறாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

உணவகங்கள், கட்டுமானத்துறை, டெக்ஸ்டைல், சிறு குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி சலூன் கடைகள் வரையில் வட மாநிலத்தவர்கள் பரவியுள்ளனர்.ஆனால், கொரோனா தொற்று, அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, அவர்களை மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்ப செய்துள்ளது.. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் எப்படியாவது ஊர் சென்றால் போதும் என்று சிறப்பு ரயிலை எதிர்நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சொந்த ஊருக்கு செல்கிறீர்கள் சரி, கொரோனா அச்சம் முடிந்த பின்னர், பணி நிமித்தமாக மீண்டும் தமிழகத்திற்கு வருவீர்களா என்று கேட்டால், விடை தெரியா வினாவிற்கு பதிலளிப்பதைப் போல, தெரியவில்லை... யோசிக்கவில்லை... என்று பல தொழிலாளர்கள் கூறுவதை பரவலாக கேட்க முடிகிறது.

Comment

Successfully posted