விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்!!

Jul 09, 2020 09:54 AM 371

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூரில் சிலைகள் தயாரிக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக ஆர்டரின் பேரில், 13 அடி உயரம் வரை பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்படும் நிலையில், இந்தாண்டு ஊரடங்கினால் ஆர்டர் அதிகம் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் இருப்பதால், சிறிய அளவிலான சிலைகளை மட்டுமே தயார் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Comment

Successfully posted