பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை-அமைச்சர் கே.சி.கருப்பணன்

Jun 22, 2019 03:53 PM 232

பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார். பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை என கூறிய அமைச்சர் கே.சி.கருப்பணன், ஈரோடு பகுதிகளில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted