நீட் தேர்வு மட்டுமல்லாமல் அனைத்து நுழைவுத் தேர்வையும் நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும்

Jun 06, 2021 10:15 PM 2105

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு வினாக்கள் மத்திய அரசு பாடத் திட்டங்களை, அடிப்படையாகக் கொண்டிருப்பதால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் நீட் தேர்வில் போட்டியிடுவதற்காக தனியாக பயிற்சி எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் போதுமான பயிற்சி மையங்கள் இல்லாததால், அவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பயிற்சி நிலையங்களுக்கு செல்வதற்கும், தேவையான புத்தகங்களை வாங்குவதற்கான நிதியும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊரகப் பகுதி மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகம், கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதை கடினமாக்கிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனவே, நீட் தேர்வு மட்டுமல்லாமல் அனைத்து நுழைவுத் தேர்வையும் நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.Comment

Successfully posted