கோவை குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.8 லட்சம் பரிசு

Oct 09, 2019 09:45 PM 97

கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவித்தால் 8 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். கோவையில், கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய சாதிக், முஜிபுர் ரகுமான், அபுபக்கர் சித்திக், அயூப் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்கள் பற்றி தகவல் அளித்தால் தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 8 லட்சம் ரூபாய் வரை பரிசாக வழங்கப்படும் என காவல்துறையினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கபடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related items

Comment

Successfully posted