ஸ்வீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ்

May 27, 2019 06:31 AM 116

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 25க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அரசு நோடீஸ் அணுப்பியுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தங்களது கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரியது. அதன் ஒரு பகுதியாக ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தனது. இதனிடையே கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 25க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்விஸ் அரசு நோட்டீஸ் அனுப்பிள்ளது.

Comment

Successfully posted