விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்-ரோஜர் பெடரர் மோதல்

Jul 13, 2019 06:46 AM 173

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்சும், ரோஜர் பெடரரும் மோதுகின்றனர்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பாடிஸ்டாவை, 6-2, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இதேபோல மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை 7-6,1-6,6-3,6-4 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் வென்றார். இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரரும் நோவக் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

Comment

Successfully posted