நாற்பது ஆண்டுகால திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு செய்த திட்டங்கள் என்ன?: துணை முதல்வர்

Oct 16, 2019 06:53 AM 375

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 40 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் 1 லட்சத்து 5 ஆயிரம் வீடுகள்தான் என்றும், ஆனால் 8 ஆண்டுகால அதிமுக ஆட்டியில் 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மின்சாரப் பற்றாக்குறையை போக்கமுடியாத வக்கற்ற ஆட்சியாக திமுக செயல்பட்டதாக குற்றம்சாட்டிய துணை முதலமைச்சர் அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக கூறினார்.

தொடர்ந்து, பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சியில் தான் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு இருந்ததாக கூறினார். திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் என்றும், இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted