உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு ஓ.பன்னீர்செல்வம் நிதியுவி

Dec 25, 2018 09:38 PM 304

ஆந்திராவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 50 ஆயிரம் ரூபாய் நிதியுவி அளித்துள்ளார்.

தேனி பழனி செட்டிபட்டியைச் சேர்ந்த சண்முக ஈஸ்வரி, என்பவரின் கணவர் ஆந்திராவுக்கு வேலை சென்ற இடத்தில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர உதவிட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதையறிந்த, ஓ.பன்னீர்செல்வம், உடலை கொண்டுவர உதவியாக, மாவட்ட ஆட்சியர் மூலம் அந்த பெண்ணிற்கு 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார். தனியார் ஆம்புலன்ஸ், உதவியாளர்கள் மற்றும் ஒரு காவலரையும் உதவிக்கு அனுப்பி வைத்தார்.

Comment

Successfully posted