போக்சோ சட்டத்தின் கீழ் 2 ஆசிரியர்கள் கைது

Jan 10, 2020 05:54 PM 414

பாலக்கோடு அருகே 10ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு செல்போன் மூலம் ஆபாச சித்திரங்களை அனுப்பிய 2 ஆசிரியர்களை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு, அதே பள்ளியைச் சேர்ந்த லட்சுமணன், சின்னமுத்து ஆகிய 2 ஆசிரியர்கள் செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்தி, ஆபாச சித்திரம், காதல் வார்த்தைகள் போன்றவைகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். இதனையடுத்து, 2 ஆசிரியர்கள் மீது மாணவியின் பெற்றோர் மகேந்திர மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் 2 ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர், அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், பாலக்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், பாலியல் வழக்கில் கைதான 2 ஆசிரியர்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Comment

Successfully posted