இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

Jan 13, 2020 12:36 PM 2229

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 152 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வருடமாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது. அந்த வகையில், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 992 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 801 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரை, கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 51 ரூபாய் 40 பைசாவுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Comment

Successfully posted