சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைப் புலி துரத்தும் காட்சி வைரல்

Dec 02, 2019 09:00 PM 437

ராஜஸ்தானின் ராண்தம்பூர் தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைப் புலி ஒன்று துரத்திச் செல்லும் காட்சி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் ராண்தம்பூர் தேசியப் பூங்காவில் புலிகள், அரியவகை மான்கள் உள்ளன. இவற்றை வாகனத்தில் சென்று பார்வையிடவும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் செல்லும் சுற்றுலா வாகனத்தைப் புலி ஒன்று பின்னால் துரத்தி வரும் காட்சியை செல்பேசியில் படம்பிடித்துள்ளனர். அந்தக் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகிறது.

Comment

Successfully posted