ஓசூர் அருகே 14 வயது சிறுமி பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

Dec 29, 2018 07:52 AM 571

ஓசூர் அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக 63 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் அப்பகுதியில் மாடு மேய்ப்பவர். முதியவர் உடன் மாடு மேய்க்க அதே ஊரைச் சேர்ந்த 14 சிறுமி வந்துள்ளார். அச்சிறுமியிடம் முதியவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் முதியவர் கோவிந்தராஜ் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Comment

Successfully posted