6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

Jan 07, 2020 09:05 PM 977

நாகப்பட்டினம் மாவட்டம், ராதாமங்கலம் அருகே 6 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகவிளாகம் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத போது  பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி அவரது தாயிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். பின்னர், நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Comment

Successfully posted