சட்டப்பேரவை கூடிய முதல் நாளிலேயே விதியை மீறிய திமுக எம்.எல்.ஏ.

May 11, 2021 03:12 PM 825

சட்டப்பேரவை கூடிய முதல் நாளிலேயே, திமுக எம்.எல்.ஏ., T.R.B. ராஜா, விதியை மீறி செல்போனை கொண்டு சென்று பயன்படுத்தியதாக புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டிருந்த போது, இருக்கையில் அமர்ந்திருந்த T.R.B. ராஜா செல்போனில் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஜெயக்குமார் சபாநாயகராக இருந்த போது இதேபோல், விதியை மீறி பேரவைக்குள் செல்போனை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியவர் T.R.B. ராஜா.

அப்போது ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், திமுக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் விதியை மீறி சட்டப்பேரவைக்குள் செல்போனை கொண்டு சென்று, திமுக எம்.எல்.ஏ. T.R.B. ராஜா பயன்படுத்திய புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரித்து சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

Comment

Successfully posted