தேனியில் இருசக்கர வாகனம், லாரி நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

Dec 11, 2019 05:31 PM 639

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் தனது மனைவி வீரலட்சுமி மற்றும் மகன் காளீஸ்வர பாண்டியனுடன் இருசக்கர வாகனத்தில் சின்னமனூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த லாரி மீது மோதியதில், வேல்முருகன் லாரியின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், படுகாயங்களுடன் கிடந்த வீரலட்சுமி மற்றும் அவரது ஒரு வயது மகன் காளீஸ்வர பாண்டியன் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். மதுரை-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்து, அப்பகுதியில் இயங்கி வரும் பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

Related items

Comment

Successfully posted