ஒருவர் தன்னை கண்ணாலேயே பலாத்காரம் செய்தார் - நடிகை இஷா குப்தா

Jul 09, 2019 09:38 PM 379

பாதுகாவலர்கள் சுற்றி இருந்த போதும் ஒருவர் தன்னை கண்ணாலேயே பலாத்காரம் செய்தார் என “ இவன் யார்” பட நாயகி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நடிகை இஷா குப்தா இந்திய அளவில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளவர். தமிழில் இவர் நடித்த “ இவன் யார் ”, இந்தியில் ரஸ்டம், கமாண்டோ 2 , தெலுங்கில் வீடெவடு, வினயா வித்யேலாயா ராமா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த நிலையில், இஷா தனது டுவிட்டர் பக்கத்தில் , ஒரு நபர் தன்னை கண்களால் பலாத்காரம் செய்தார் என குறிப்பிட்டிருக்கிறார். அவரை பல முறை நகர்ந்து போக சொல்லியும் போகவில்லை என்றும் இத்தனைக்கும் தன்னை சுற்றி தனது பாதுகாவலர்கள் 2 பேர் இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தன்னை அந்த நபர் தொடவில்லை, வேறு எதுவும் பேசவில்லை, ஆனால் நீண்ட நேரம் முறைத்து பார்த்தபடியே இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஆண்களால் தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்கின்றனர் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் இந்த சம்பவத்தை விளக்கும் என்றும், அந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted