வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்! 

Dec 13, 2019 06:42 PM 496

வெங்காய ஜிமிக்கி கம்மலை பரிசாக அளித்து தனது மனைவியை இம்பிரஸ் செய்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

அக்ஷய் குமார் தான் நடித்துள்ள குட் நியூஸ் படத்தை விளம்பரம் செய்ய நடிகை கரீனா கபூர் கானுடன் தி கபில் பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கரீனாவுக்கு வெங்காய கம்மல் பரிசாக கொடுக்கப்பட்டது. அது அவருக்கு பிடிக்கவில்லையாம். இதையடுத்தே, அக்ஷய் குமார் தன் மனைவி ட்விங்கிள் கன்னாவுக்கு வெங்காய ஜிமிக்கி கம்மலை பரிசாக அளித்துள்ளார்.

image

அந்த கம்மலை புகைப்படம் எடுத்து ட்விங்கிள் கன்னா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “நீங்கள் கொடுத்து வைத்தவர் மேடம், அதனால் தான் இவ்வளவு காஸ்ட்லியான பரிசு கிடைத்துள்ளது” என்று பதிலுக்கு ரீப்லேவும் செய்துள்ளனர்.

Comment

Successfully posted