நாளை முதல் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!!

Aug 02, 2020 06:45 PM 574

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ஆன்லைன் வகுப்புகள் நாளை தொடங்குகின்றன.

இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகளை நாளை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வழியாக அல்லது கல்லூரி இணையதளத்தில் பாடங்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புக்கான கால அட்டவணை, பாடம் தயாரித்தல் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு ஆகியவற்றை துறைத்தலைவர்கள் முறையாக திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Comment

Successfully posted