திமுக ஆதரவு அல்லாதவர்களின் பெயர்கள் மட்டும் நீக்கம்

Apr 07, 2021 09:26 AM 1178

சென்னை கொளத்தூர் தொகுதியில் அதிமுகவினரின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆதிராஜாராமும், திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். இங்கு 150 பாகங்கள் உருவாக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பாகத்திலும் 50 முதல் 150 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக ஆதரவு அல்லாதவர்களின் பெயர்கள் மட்டும் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு விசாரித்துள்ளனர். அதற்கு அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted