திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

Jan 27, 2020 12:58 PM 245


திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்காக, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தண்ணீர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து, முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 521 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டப் பின் செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, 7ஆயிரத்து 600 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted