தாம்பரத்தில் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2 திறப்பு

Dec 08, 2019 11:47 AM 327

தாம்பரத்தில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் 2-ஐ தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

தாம்பரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துடன், கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தாம்பரத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 2 அமைக்கப்படும்' என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தார்.

அதன்படி, கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடப்பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து, நீதிமன்றத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

இந்த விழாவில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted