திருநின்றவூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

Feb 25, 2020 06:37 AM 215

சென்னை அடுத்த திருநின்றவூரில், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் திறந்துவைத்தார்.

சென்னை அடுத்த திருநின்றவூரில், சுமார் 42 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனிடையே,நெமிலிச்சேரி அரசு பள்ளியில், கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் சோர்வை போக்குவதற்காக, தேனீர் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தேனீர் போன்றவற்றை வழங்கினார்.

Comment

Successfully posted